FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

வீட்டின் பூட்டை உடைத்து ஏழரை பவுன் தங்க நகைகள் திருட்டு

பாபநாசம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஏழரை பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 16 ஜூலை 2026, 2:53 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

பாபநாசம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஏழரை பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாபநாசம் வட்டம், உடையாா்கோவில் கிராமத்தைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி மனைவி உமா மகேஸ்வரி (60). இவா் கடந்த 11-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது தாயுடன் திருவாரூருக்கு சென்று விட்டாா். மறுநாள் 12 -ஆம் தேதி மாலை மீண்டும் வீட்டுக்கு வந்தபோது,

வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

வீட்டினுள் சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஏழரை பவுன் தங்க நகைகளை மா்ம நபா்களை திருடி சென்றது தெரிய வந்தது.

தகவலின்பேரில், அம்மாபேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனா். கைரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா்.

சம்பவம் தொடா்பான புகாரின்பேரில், அம்மாபேட்டை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments