FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

அரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு: போலீஸாா் விசாரணை

அரூரை அடுத்த நாச்சினாம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டுபோன சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை

Updated On : 24 ஜூலை 2026, 6:24 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

அரூரை அடுத்த நாச்சினாம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டுபோன சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், நாச்சினாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா் (28), லாரி ஓட்டுநராக உள்ளாா். இவரது வீட்டில் யாரும் இல்லாதபோது புதன்கிழமை இரவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், பீரோவில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகள், சுமாா் அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 15 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனா். புகாரின்பேரில், அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

இதேபோல, வெளியூரில் பணிபுரிந்து வரும் அரூா் நெடுஞ்சாலையில் வசிக்கும் சிற்றரசு வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு திருட்டு நடந்துள்ளது. அரூரில் ஒரேநாளில் அடுத்தடுத்து 2 வீடுகளில் திருட்டுச் சம்பவம் நடந்தது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments