தருமபுரி

செனக்கல் நீர்ப்பாசன திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வலியுறுத்தல்

DIN

செனக்கல் நீர்ப்பாசன திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனகொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கொ.நா.ம.தே கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா தருமபுரி மாவட்டத் தலைவர் பி.வரதராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து நீர்ப் பாசனத்தை மேம்படுத்தும்
வகையில் செனக்கல் நீர்ப்பாசன திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, அரசு அறிவித்துள்ள இந்தத் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமலேரிப்பட்டி-புங்கனைப்புதூர் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும். இதை கே.ஈச்சம்பாடி அணைக்கட்டுவின் பாசன கல்வாய்களை மருதிப்பட்டி, மோட்டூர் வரையிலும் நீட்டிப்பு செய்ய வேண்டும்.
60 வயது நிறைவடையும் விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் அரசு உதவித் தொகை வழங்க வேண்டும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தில் சுத்திகரிக்கப்படாத தண்ணீரால் ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகளை நிரப்ப வேண்டும்.
மரவள்ளி கிழங்கு மூட்டைக்கு ரூ.1500-ம், மஞ்சள் மூட்டைக்கு ரூ.15 ஆயிரமும் அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அரூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மாநில இளைஞர் அணி செயலர் எஸ்.சூரியமூர்த்தி, மாநில துணைப் பொதுச்செயலர் பி.தங்கவேல், மாநில கொள்கை பரப்பு செயலர் ஜி.அசோகன், மாவட்ட செயலர்கள்
கே.செந்தில்முருகன், என்.ராஜா, ஒன்றியச் செயலர் ஆர்.பழனிசாமி, ஒன்றியத் தலைவர் ஜி.பி.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

அழகுப் பதுமைகள் அணிவகுப்பு!

நிதமும் உன்னை நினைக்கிறேன், நினைவினாலே அணைக்கிறேன்!

SCROLL FOR NEXT