தருமபுரி

இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதல்: மேற்பார்வையாளர் சாவு

மொரப்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் புதன்கிழமை உயிரிழந்தார்.

தினமணி

மொரப்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் புதன்கிழமை உயிரிழந்தார்.
 அரூர் வட்டம், கோட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சென்றாயன் மகன் பெருமாள் (45). இவர், திருப்பூரில் டாஸ்மாக் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார்.
 இந்த நிலையில், தமது சொந்த வேலையின் காரணமாக இருசக்கர வாகனத்தில் அரூர்-மொரப்பூர் சாலையில், மொரப்பூர் நோக்கிச் சென்றார். அப்போது கல்லூர் (பனந்தோப்பு) எனுமிடத்தில் எதிரே வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மொரப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

ரேண்டம் மெமரிஸ்... ஆன் ஷீத்தல்!

தல - சின்ன தல... மலேசியாவில் அஜித் - சிம்பு சந்திப்பு!

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

SCROLL FOR NEXT