தருமபுரி

கண்காணிப்பு கேமரா பொருத்த வலியுறுத்தல்

DIN

பாலக்கோட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாலக்கோடு நகருக்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட அரசு மற்றும்  தனியார் பேருந்துகள், கனரக வாகனங்கள் நகருக்குள்ளேயும், புறவழிச் சாலையிலும் சென்று வருகின்றன. 
நகரில் அதிகளவிலான கடைகள், புதிய வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரி, வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை என பொதுமக்கள் தினந்தோறும் நகருக்கு வந்து செல்கின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசலைக் கண்காணிக்க, கட்டுப்படுத்த, குற்றச் சம்பவங்களைக் கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT