தருமபுரி

பொம்மிடி ரயில் நிலையத்தில் தூய்மைப் பணிகள்

DIN

பொம்மிடி ரயில் நிலையத்தில் டெங்கு ஒழிப்பு தூய்மைப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்,  பொம்மிடி ரயில் நிலையம் மூலம் நாள்தோறும் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் வெளியூர், உள்ளூருக்கு வந்து செல்கின்றனர். தற்போது மழைக் காலம் என்பதால் வீசப்படும் பிளாஸ்டிக் பொருள்களில் நீர்தேங்கி டெங்கு புழுக்கள் உற்பத்தி ஆவதைத் தடுக்கும் வகையில் தருமபுரி மண்டல பேரூராட்களின் உதவி இயக்குநர் ஜீஜாபாய் தலைமையில்,  பொ. மல்லாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மா. ராஜா ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர் முரளி ஆகியோர் அடங்கிய குழுவினர் பொம்மிடி ரயில் நிலைய வளாகப் பகுதியை சுத்தம் செய்தனர். மேலும் கொசுக்களை அழிப்பதற்கான புகை மருந்துகள் தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT