தருமபுரி

மறைந்த படை வீரர்களுக்கு அஞ்சலி

DIN

இந்தியா முழுவதும் பல்வேறு படைப் பிரிவுகளில் பணியின் போது உயிரிழந்த 414 பேருக்கு, தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்திலுள்ள மறைந்த காவலர் நினைவுத் தூணில் காவல் கண்காணிப்பாளர் ப. கங்காதர் ஞாயிற்றுக்கிழமை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எச். ரஹமத்துல்லா, சார் ஆட்சியர் ம.ப. சிவன்அருள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் காந்தி, செல்லபாண்டியன், ராஜ்குமார், ராஜேந்திரன், விஷ்ணு மற்றும் ஊர்க்காவல் படை கட்டளை அதிகாரி தண்டபாணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். முன்னதாக 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்கப்பட்டன. 
கிருஷ்ணகிரியில்... மறைந்த படை வீரர்களுக்கு கிருஷ்ணகி மாவட்டக் காவல் துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
1959-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதி லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்னும் இடத்தில் சீன ராணுவத்தினர் மறைந்திருந்து திடீர் தாக்குதல் நடத்தியதில் மத்திய பாதுகாப்புப் படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். 
வீரமரணம் அடைந்த காவலர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ஆம் தேதி காவலர் வீர வணக்க நாளாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 
அதன்படி, நிகழ்வாண்டில் பணியின் போது நாடு முழுவதும் வீரமரணமடைந்த 414 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கிருஷ்ணகிரி ஆயுதப்படை மைதானத்தில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. 
இந்த நிகழ்வில் 63 குண்டுகள் முழங்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர், கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த.மகேஷ்குமார் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 
இந்த நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ்,  துணைக் காவல் கண்காணிப்பாளர் கண்ணன், மீனாட்சி, சரவணன், ராஜேந்திரன், ஆய்வாளர்கள் முத்தமிழ் செல்வரசு, அன்புமணி, செல்வராஜ், சுப்பிரமணி மற்றும் காவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT