தருமபுரி

இ.ஆர்.கே கல்லூரியில் புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம்

DIN

அரூரை அடுத்த எருமியாம்பட்டி இ.ஆர்.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
இந்த முகாமை இ.ஆர்.கே கல்வி நிறுவனங்களின் தாளாளர் இ.ஆர்.செல்வராஜ் தொடக்கி வைத்தார்.
18 வயது நிறைவடைந்த அனைவரும் வாக்காளர்களாக சேர வேண்டும், தேர்தலில் வாக்காளர்கள்  வாக்கு அளிப்பதன் அவசியம், வாக்குகளை பதிவு செய்ய பணம் மற்றும் பொருள்களை வாங்கக் கூடாது, நேர்மையாக அனைவரும் வாக்குகளை அளிக்க வேண்டும் என்பது குறித்த  கல்லூரி மாணவிகளுக்கு பாப்பிரெட்டிப்பட்டி துணை வட்டாட்சியர் (தேர்தல்) மு.பார்வதி எடுத்துரைத்தார்.
இந்த முகாமில் 800-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் புதிய வாக்காளர்களாக சேர்ந்தனர். இதில், இ.ஆர்.கே கல்லூரி முதல்வர் த.சக்தி, நிர்வாக அலுவலர் சி.அருள்குமார்,  கல்லூரி தேர்தல் அலுவலர் கே.பிரபு, வருவாய் ஆய்வாளர் சண்முகப் பிரியா, கிராம நிர்வாக அலுவலர் பி.சிவன், பேராசிரியர் ஞானபிரதாப் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT