தருமபுரி

"காங்கிரஸ் ஆட்சிக்கால நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்'

DIN

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட அரசு நலத் திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் செயலரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான ஸ்ரீ வல்ல பிரசாத் கூறினார்.
அரூரில் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு தலைமை வகித்தார்.
இக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் ஸ்ரீ வல்ல பிரசாத் பேசியது: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 100 நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தால் கிராமப் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்கள் பலர் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். அதேபோல், கல்லூரி மாணவர்களுக்கு உடனுக்குடன் கல்விக் கடன்கள் வழங்கப்பட்டன. தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழியாக பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் மக்களுக்கு தெரியவந்துள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
எனவே, வாக்குச் சாவடி முகவர்கள் அனைவரும் வரும் மக்களவைத் தேர்தலின் போது, வாக்காளர்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் ஆட்சியின் சிறப்புகளை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்றார்.
இதில், தமிழக காங்கிரஸ் பொதுச் செயலர் கீழானூர் ராஜேந்திரன், மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் பி.ஆர்.சுந்தரம், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT