முகப்பு
தருமபுரி

தருமபுரி மாவட்டத்தின் மீது அரசு தனிக் கவனம்: அமைச்சர் கே.பி.அன்பழகன்

தருமபுரி மாவட்டத்தின் மீது தனிக்கவனம் செலுத்தி அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

Updated On : 25 பிப்ரவரி 2019, 8:25 am IST
பகிர்:

தருமபுரி மாவட்டத்தின் மீது தனிக்கவனம் செலுத்தி அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
இதுகுறித்து தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர்கூறியது:
தருமபுரி மாவட்டத்தின் மீது தனிக் கவனம் கொண்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு சிறப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. தருமபுரியில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவச் சிலையை திங்கள்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்க உள்ளார். தொடர்ந்து, அரூரில் நடைபெறும் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார் என்றார்.
அரூர், பாப்பிரெட்டிப்பட்டியில் இன்று உள்ளூர் விடுமுறை
தருமபுரி, பிப்.24: அரூர் கோட்டத்தில் தீர்த்தமலை அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் கோயில் மாசிமக தோரோட்டத்தையொட்டி, பிப்.25-ஆம் தேதி (திங்கள்கிழமை) அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களில் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர்  எஸ்.மலர்விழி, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டம், அரூர் கோட்டத்தில் உள்ள தீர்த்தமலை அருள்மிகு தீர்த்த்கிரீஸ்வரர் திருக்கோயில் மாசிமக தேரோட்டத்தையொட்டி அரூர் வட்டத்துக்கு மட்டும் பிப்-25-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் மார்ச் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம், 1881-இன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், உள்ளூர் விடுமுறை நாள் அன்று, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சார்நிலைக் கருவூலங்கள் அரசு பாதுகாப்பான அரசு அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என அதில், அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.