தருமபுரி

இ.ஆர்.கே. கல்லூரியில் இரண்டு நாள் அறிவியல் கருத்தரங்கு

DIN


அரூரை அடுத்த எருமியாம்பட்டி இ.ஆர்.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச அளவில் நவீன உலோக அறிவியல் எனும் தலைப்பில் இரண்டு நாள்கள் கருத்தரங்கு நடைபெற்றது.
இ.ஆர்.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சர்.சி.வி ராமன் மன்றம், இந்திய தொழில்நுட்ப மன்றம், சென்னை இளவேனிர் அமைப்புச் சார்பில் நடைபெற்ற இக் கருத்தரங்கில், இ.ஆர்.கே. கல்லூரி முதல்வர் த.சக்தி தலைமை வகித்தார். இ.ஆர்.கே கல்வி நிறுவனங்களின் தாளாளர் இ.ஆர்.செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பி.ராமசாமி பேசினார். பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் எஸ்.குணசேகரன், சென்னை பல்கலைக்கழக படிகவியல் துறை பேராசியர் கே.குணசேகரன், சென்னை இளவேனில் அமைப்பின் இயக்குநர் முனைவர் எம்.சீனிவாசன், காரைக்குடி மத்திய மின் வேதியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் முனைவர் எஸ்.சுதாகர், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் பி.விஜயன், பேராசிரியர்கள் எஸ்.செல்வபாண்டியன், பி.பாலாஜி பர்கவ், ஏ.சுப்பிரமணியன், டி.எஸ். ஸ்ரீதர், எம்.செந்தில் பாண்டியன், ஜெ.கல்யாண சுந்தர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்பித்தனர். சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. 
பேராசிரியர்கள் எம்.சிவக்குமார், வி.அருண், உதவிப் பேராசிரியர் எஸ்.சிவக்குமார் உள்ளிட்ட பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT