தருமபுரி

திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

DIN

பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தையில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் திமுக மாவட்டச் செயலர் தடங்கம் பெ.சுப்பிரமணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது .
திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமாரை ஆதரித்து, கூட்டணி கட்சிகளான மதிமுக, காங்கிரஸ், இந்திய ஜனநாயகக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளைச் சார்ந்த நிர்வாகிகள் பேசினர்.
இக்கூட்டத்துக்கு தருமபுரி முன்னாள் மக்களவைத் தொகுதி உறுப்பினர் தாமரைச்செல்வன், மாவட்டப் பொருளாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, பாலக்கோடு பேரூர் செயலர் முரளி, பாலக்கோடு ஒன்றியச் செயலர்கள், குட்டி, அன்பழகன், காரிமங்கலம் ஒன்றியச் செயலர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
பென்னாகரத்தில்...
பென்னாகரம் அருகே சமத்துவபுரம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, பென்னாகரம் திமுக சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் இன்பசேகரன் தலைமை வகித்தார். காங்கிரஸ் மாவட்டச் செயலர் சிற்றரசு, மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலர் குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் தேவராசன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான நஞ்சப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், தருமபுரி திமுக மாவட்டச் செயலரும், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான தடங்கம் பெ.சுப்பிரமணி, கூட்டணி கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பேரூர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில துணை செயலர் தவமணி, திராவிடர் கழகம் தீர்த்தகிரி, ஒன்றியச் செயலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளியின் பைக் எரிப்பு: போலீஸ் விசாரணை

‘சந்தா்ப்பவாத’ அரசியல்வாதி மம்தா: மேற்கு வங்க காங்கிரஸ் தலைவா் விமா்சனம்

கலாக்ஷேத்ரா முன்னாள் பேராசிரியா் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

இன்று முதல் புதிய அந்நிய செலவாணி மாற்று விகிதம் அமல்

தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

SCROLL FOR NEXT