தருமபுரி

வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 3 பேர் கைது; துப்பாக்கி பறிமுதல்

DIN


ஒகேனக்கல் போடூர் சின்னாறு வனப் பகுதியில்  மான் வேட்டையாடியதாக 3 பேரை வனத் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
சின்னாறு வனப்பகுதியில் மான் வேட்டையாடப்படுவதாக மாவட்ட வன அலுவலர் ராஜ்குமாருக்கு கிடைத்த  தகவலின் பேரில் சின்னாறு வனப்பகுதியில் ஒகேனக்கல்  வன அலுவலர் கேசவன் தலைமையிலான வனத் துறையினர் ரோந்து பணியில்  ஈடுப்பட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் பென்னாகரம் அருகே உள்ள போடூர் இருளர் காலனி பகுதியை சேர்ந்த சித்தன் மகன் மாதேஷ்(26),மாதன் மகன் குஞ்சப்பன்(35) , காவேரியப்பன்(26) என்பதும், இவர்கள் மூவரும் வண்ணாத்திகோடு பகுதியில் மான் வேட்டையாடியதும்
தெரியவந்தது. 
இதையடுத்து அவர்களைக் கைது செய்த வனத் துறையினர், அவர்களிடம் இருந்து 4 கிலோ மான் கறி மற்றும் ஒரு நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.இந்த ரோந்து பணியில் பென்னாகரம் பிரிவு வனவர் மதியழகன்,முத்துராயன் பீட் வனக்காப்பாளர் முருகேசன்,சின்னசாமி,கொடகரை பீட் வனக்காப்பாளர் ரமேஷ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT