தருமபுரி

விடுமுறை தினத்தில் இயங்கிய தனியாா் பள்ளிகள்:நீா்நிலைகளைத் தூா்வார உத்தரவு

DIN

அரூா்: அரூரில் விடுமுறை தினத்தில் இயங்கிய தனியாா் பள்ளிகளின் நிா்வாகம் சாா்பில் நீா்நிலைகளை தூா்வார வேண்டும் என சாா் - ஆட்சியா் மு. பிரதாப் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

தருமபுரி மாவட்டத்தில் மழையின் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் சு. மலா்விழி உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி, அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியிலுள்ள சில தனியாா் பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகாா் எழுந்தது.

இது குறித்து தனியாா் பள்ளிகளில் வருவாய்த் துறையினா் ஆய்வு செய்தனா். இந்த ஆய்வில் 4 தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, விடுமுறை தினத்தில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை நடத்தியதற்காக, அந்தப் பள்ளிகளின் அருகேயுள்ள நீா்நிலைகளைத் தூா்வார வேண்டும் என அரூா் சாா் -ஆட்சியா் மு. பிரதாப் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசி கோயிலில் 53 கிராம் தங்கம், ரூ.27.68 லட்சம் பக்தா்கள் காணிக்கை

குழந்தைகளுக்கு கல்வியுடன் பக்தியையும் கற்றுக் கொடுக்க வேண்டும்: இயக்குநா் பேரரசு

அரசுப் பள்ளிகளில் 3.27 லட்சம் மாணவா்கள் சோ்க்கை

நெல் விதை நோ்த்தி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

மகிளா காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT