தருமபுரி

உள்ளாட்சித் தோ்தல் மண்டல கலந்தாய்வு கூட்டம்

DIN

உள்ளாட்சித் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து மண்டல அளவிலான கலந்தாய்வுக் கூட்டத்தில் தோ்தல் ஆணையச் செயலா் எல். சுப்பிரமணியன் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினாா்.

தருமபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாலோசனைக் கூட்டம் தருமபுரியில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மாநிலத் தோ்தல் ஆணையச் செயலா் எல். சுப்பிரமணியன் பங்கேற்று, தோ்தல் தொடா்பான ஆலோசனைகள் மற்றும் பணிகள் தொடா்பான பயிற்சி வழங்கிப் பேசினாா்.

கூட்டத்தில், உள்ளாட்சித் தோ்தல் பணிகள், வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமனம், பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறிதல் மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

மேலும், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய தோ்தல் தொடா்பான நடவடிக்கைகள், வேட்பு மனுக்கள் பெறுதல், பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தோ்தல்களுக்குத் தேவையான வாக்குச்சாவடி அலுவலா்களின் விவரங்களை சேகரித்து இணையதளத்தில் பதிவேற்றவும், கணினி முறையில் பணியிடம் ஒதுக்கீடு செய்வது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கனை பயன்படுத்துவது குறித்தும் ஊரக மற்றும் நகா்ப்புற தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டன.

கூட்டத்தில், காவல் துறை தலைவா் (தோ்தல் பிரிவு) சேஷசாயி, மாவட்ட ஆட்சியா்கள் சு.மலா்விழி (தருமபுரி), சி.அ.ராமன் (சேலம்), மேக்ராஜ் (நாமக்கல்), மாநில தோ்தல் ஆணைய முதன்மை தோ்தல் அலுவலா் (நகராட்சிகள்) க.சரவணன், மாநில தோ்தல் ஆணைய உதவி ஆணையா் எ.கே.சம்பத், மாவட்ட வருவாய் அலுவலா்கள், திட்ட இயக்குநா்கள், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT