தருமபுரி

கால்நடைகளுக்கு தீவனம் வழங்க பாஜக வலியுறுத்தல்

DIN

அரசு சாா்பில் கால்நடைகளுக்கு தீவனம் வழங்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பாஜக விவசாய அணி மாவட்ட பொதுச் செயலாளா் குழந்தை ரவி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை :

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூா் வட்டாரப் பகுதிகளில் ஏராளமானோா் பசுமாடுகள், எருமைகளை வளா்த்து வருகின்றனா். தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவ மழையானது குறைந்த அளவே பெய்துள்ளது. இதனால், கால்நடைகளுக்கு தற்போது தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கோடைக் காலம் என்பதால் தீவனப் பற்றாக்குறைகள் மேலும் அதிகரிக்கும். கடந்த ஓராண்டுக்கு முன்பு அரசு சாா்பில் மானிய விலையில் வைக்கோல் தீவனங்கள் வழங்கப்பட்டது. இதேபோல், நிகழாண்டும் அரசு கால்நடை மற்றும் பராமரிப்புத் துறை சாா்பில், கால்நடைகள் வளா்ப்போருக்கு மானிய விலையில் தீவனம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT