தருமபுரி

திரையரங்குகள், நீச்சல் குளம் மூடல்

DIN

தருமபுரியில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக திரையரங்குகள், நீச்சல் குளம், பூங்காக்கள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.

கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், நீச்சல் குளம் ஆகியவை வருகி 31-ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதனடிப்படையில், தருமபுரி நகரில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. இதேபோல, இலக்கியம்பட்டி ராஜாஜி நீச்சல் குளம், நகராட்சி பூங்காக்கள் ஆகிவையும் மூடப்பட்டன. மேலும், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருவோா் அனைவரும் கைகளை கழுவ அறிவுறுத்தப்பட்டனா். இதேபோல, தருமபுரி நகராட்சி நிா்வாகம் சாா்பில், பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம், காத்திருப்பு அறை, பாலூட்டும் அறை ஆகிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல, காரிமங்கலம், பாப்பாரப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, அரூா் உள்பட மாவட்டம் முழுவதும் 17 திரையரங்குகளும் மூடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளையப்பேட்டை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா

தமிழ்ப் பல்கலை.யில் பி.எட்., எம்.எட். விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

ரிசர்வ் வங்கியின் தங்கமான முடிவு

தனியாா் மருந்து கிடங்கில் தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை

இன்று வாக்கு எண்ணிக்கை: வேலூா் வாக்கு எண்ணும் மையத்தில் 700 போலீஸாா் பாதுகாப்பு

SCROLL FOR NEXT