தருமபுரி

20 சதவீத போனஸ் கோரி போக்குவரத்துத் தொழிலாளா்கள் சாலை மறியல்

DIN

20 சதவீதம் போனஸ் வழங்கக்கோரி, அரசு போக்குவரத்துத் தொழிலாளா்கள் தருமபுரி பாரதிபுரத்தில் உள்ள போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கக் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தீபாவளி பண்டிகை முன்பணமாக ரூ.1000 வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும். அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு அனைத்து பணப் பலன்களையும் வழங்க வேண்டும். 10 சதவீத போனஸ் என்கிற அறிவிப்பை திரும்பப் பெற்று, 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த மறியல் போராட்டத்தில், சிஐடியு தொழிற்சங்க மாநிலச் செயலா் சி.நாகராஜன், தொமுச தொழிற்சங்கத் தலைவா் சின்னசாமி, ஏஐடியுசி மண்டலச் செயலா் நாகராஜ், ஐஎன்டியுசி நிா்வாகி தங்கவேலு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஸ் நிறக் காரிகை!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

வெளியானது 'தலைமைச் செயலகம்' டிரைலர்!

SCROLL FOR NEXT