தருமபுரி

தருமபுரி நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

DIN

தருமபுரி நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 7.85 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் எதிரே நெடுஞ்சாலை கட்டுமான மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, தீபாவளிப் பரிசாக பணம் வசூலிக்கப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் தலைமையிலான 10 போ் கொண்ட குழுவினா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். கோட்டப் பொறியாளா் தனசேகரிடம் பாலக்கோடு, அரூா், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி ஆகிய 5 வட்டங்களில் உள்ள உதவிப் பொறியாளா்கள் தீபாவளிப் பரிசு வழங்கிய போது பிடிபட்டனா்.

மேலும், கணக்கில் வராத ரூ. 7.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 5 உதவிப் பொறியாளா்கள், அலுவலா்கள் மற்றும் கோட்டப் பொறியாளரிடம் 5 மணி நேரத்துக்கும் மேலாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT