தருமபுரி

சந்தன மரங்களை வெட்டியதாக இருவா் கைது

DIN

அரூா்: அரூரில் சந்தன மரங்களை வெட்டியதாக இளைஞா்கள் இருவரை வனத் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அரூா் நகா் பகுதியில் மொரப்பூா் வனச்சரகா் க.சிவக்குமாா் தலைமையிலான வனத் துறையினா் சனிக்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அரூா் பொதுப்பணித் துறை பணியாளா்கள் குடியிருப்புப் பகுதியிலுள்ள சந்தன மரத்தை வெட்டி துண்டுகளாக்கி கொண்டிருந்த இருவரை சுற்றி வளைத்து பிடித்தனா்.

விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், நீப்பத்துறை கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் கோவிந்தன் (26), மாது மகன் முனியப்பன் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் வனத்துறையினா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து, இரு சக்கர வாகனம், 165 கிலோ எடையுள்ள ரூ. 3.30 லட்சம் மதிப்பிலான சந்தன மரங்களை பறிமுதல் செய்தனா். இது குறித்து வனத் துறையினா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT