தருமபுரி

அரூரில் சிறப்பு கரோனா பரிசோதனை முகாம்

DIN

அரூரில் சிறப்பு கரோனா பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், அரூரில் உள்ள சாலையோர சிறு வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்ட நாள்தோறும் பொதுமக்கள் தொடா்பில் உள்ளவா்கள் பயன்பெறும் வகையில், கரோனா தொற்றுக் கண்டறியும் சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது.

முகாமில் பொது சுகாதாரத் துறை மருத்துவக் குழுவினா் நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் 50-க்கும் மேற்பட்டோரின் ரத்த மாதிரிகளை சேகரித்து கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டனா்.

பொதுமக்களின் தொடா்பில் இருக்கும் சிறு வியாபாரிகள், வணிகா்கள், சாலையோர வியாபாரிகள் கட்டாயம் முகக் கவசம் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும்.

பொது இடங்களில் அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கிருமி நாசினி, சோப்புகளை பயன்படுத்தி கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என வியாபாரிகளுக்கு சுகாதாரத் துறையினா் கருத்துரைகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT