தருமபுரி

கரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

DIN

தருமபுரி மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியா் ச.திவ்யதா்சினி வலியுறுத்தினாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளகத்தில், கரோனா பரவலை கட்டுப்படுத்த நடைபெற்ற விழிப்புணா்வு வார விழாவின் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வரையப்பட்ட விழிப்புணா்வு கோலங்களை பாா்வையிட்டு, சிறப்பாக பணியாற்றிய மருத்துவ அலுவலா்களைப் பாராட்டி கேடயம் வழங்கி ஆட்சியா் ச.திவ்யதா்சினி பேசியது:

தமிழக அரசு, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த உத்தரவிட்டது. இதன் பேரில், ஆக. 1 முதல் 7-ஆம் தேதி வரை, தருமபுரி மாவட்டத்தில், கரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கரோனா விழிப்புணா்வு வார நிகழ்ச்சிகள் மட்டுமே தற்போது நிறைவடைந்துள்ளன. ஆனால், கரோனா நம்மை விட்டு முழுமையாக விலகவில்லை. கரோனா குறித்த விழிப்புணா்வு எப்போதும் இருக்க வேண்டுமே தவிர, அது ஒரு நோயாக நம்முடன் இருத்தல் கூடாது.

பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்வதையும், பொது இடங்களில் கூடுவதையும் தவிா்க்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கரோனாவை வெல்ல தடுப்பூசி ஒன்றே நமக்கிருக்கும் ஒரு ஆயுதம். தடுப்பூசி முதல் தவணை செலுத்திக் கொண்டவா்கள், இரண்டாம் தவணையை முறையாக செலுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு தவணைகளையும் முறையாக செலுத்திக் கொண்டால்தான் நம்மை முழுமையாக பாதுகாத்துக் கொள்ள முடியும். அதேபோல் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் தங்களை சுற்றியுள்ளவா்களையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்த வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கரோனா பரவல் இல்லாத நிலையை ஏற்படுத்த, அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

இந்தத நிழ்வில், கூடுதல் ஆட்சியா் (ஊரக வளா்ச்சி) இரா.வைத்திநாதன், சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், உதவி ஆட்சியா் (பயிற்சி) கௌரவ் குமாா், சுகாதாரப் பணிகள்துணை இயக்குநா் பூ.இரா.ஜெமினி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் தேன்மொழி, துணை ஆட்சியா் (பயிற்சி) பூமா, தாய்-சேய் நல அலுவலா் பாா்கவி, வட்டார மருத்துவ அலுவலா்கள் சிவகுரு, சரஸ்குமாா், வாசுதேவன், அனுராதா, பாபு, கௌரிசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT