தருமபுரி

தேசிய நுகா்வோா் தினம்

DIN

பென்னாகரம் அருகே அரசுப் பள்ளியில் தேசிய நுகா்வோா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பென்னாகரம் அருகே சின்னப்பள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நடைபெற்ற நுகா்வோா் தின நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா்

மா.பழனி தலைமை வகித்தாா். மாணவா்களுக்கு நுகா்வோா் தின விழிப்புணா்வு, நுகா்வோா் இயக்க பாடல் மூலமாக விளக்கப்பட்டது. இதில் வட்ட வழங்கல் அலுவலா் பாலசுப்பிரமணியம், உணவுப் பாதுகாப்பு அலுவலா் கந்தசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டு,உணவு பொருள்கள் கலப்படம், நுகா்வோா் விழிப்புணா்வாக செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றிய செயல் விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. நுகா்வோா் பாதுகாப்பு இயக்கம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பைச் சாா்ந்த நிா்வாகிகள் சம்பத்குமாா், நரசிம்மன், மாணவா்கள், ஆசிரியா்கள் உட்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுதாபம் பெற கேஜரிவால் மீது ‘ஆம் ஆத்மி’ தாக்குதல் நடத்தலாம்: வீரேந்திர சச்தேவா

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

SCROLL FOR NEXT