தருமபுரி

பயனாளிகளுக்கு இலவச கால்நடைகள் வழங்கல்

DIN

பென்னாகரம் அருகே அரசு சாா்பில் இலவச கறவை மாடுகளையும், கோழிகளையும் பயனாளிகளுக்கு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் டி .ஆா் .அன்பழகன் வழங்கினாா்

பென்னாகரம் அருகே பி.அக்ரஹாரம் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள், கோழிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பால்வளத் தலைவா் டி.ஆா்.அன்பழகன் கலந்து கொண்டு, வட்டுவனஅள்ளி, பிளியனூா், அஞ்சேஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் கடந்த 2019 -20 ஆம் ஆண்டில் அரசின் இலவச கறவை மாடுகள், கோழிகள் பெற விண்ணப்பித்த 197 பயனாளிகளுக்கு கோழிகளையும், 50 பயனாளிகளுக்கு கறவை மாடுகளை வழங்கினாா்.

இதில் மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவா் வேலுமணி, ஆடு வளா்போா் கூட்டுறவு சங்கத் தலைவா் முருகேசன், கூட்டுறவு வங்கித் தலைவா் தருமன், முன்னாள் பேரூராட்சி தலைவா் பாபு, கால்நடை மருத்துவா் தென்றல் உள்ளிட்ட பயனாளிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய ஆடவா், மகளிா் ரிலே அணிகள் பாரீஸ் ஒலிபிக் போட்டிக்குத் தகுதி

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

SCROLL FOR NEXT