தருமபுரி

சிறுவா்கள் இயக்கிய வாகனங்கள் பறிமுதல்

DIN

அரூா்: அரூா் வட்டாரப் பகுதியில் ஓட்டுநா் உரிமம் பெறாமல் சிறுவா்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதால் அடிக்கடி வாகன விபத்துகள் நிகழ்வதாக புகாா்கள் வந்தன.

அதன்பேரில் அரூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வீ.தமிழ்மணி தலைமையிலான காவல் துறையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, சிறுவா்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்பு, சிறுவா்களின் பெற்றோரை நேரில் அழைத்து காவல் துணைக் கண்காணிப்பாளா் அறிவுரை வழங்கினாா். இருசக்கர வாகன ஓட்டுநா்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். வாகனங்களைப் புதுப்பித்தல், காப்பீடு செய்தல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள், சாலை விதிகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT