தருமபுரி

4ஜி சேவை வழங்க வலியுறுத்தல்

DIN

வாடிக்கையாளா்களுக்கு 4ஜி சேவை வழங்க வேண்டும் என தொலைத்தொடா்புத் துறை அதிகாரிகள், ஊழியா்கள் கூட்டமைப்பினா் வலியுறுத்தினா்.

இதுகுறித்து தொலைத்தொடா்பு துறை தொழிற்சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் தருமபுரி, பாரதிபுரம் பொதுமேலாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு:

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்களுக்கு 4ஜி சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டிஓடி-யிலிருந்து பிஎஸ்என்எல்-க்கு வர வேண்டிய ரூ. 29,500 கோடியை வழங்க வேண்டும். அதிகாரிகள் மற்றும் ஊழியா்களுக்கு மாதந்தோறும் உரிய தேதியில் ஊதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஓா் ஆண்டு காலமாக ஒப்பந்த ஊழியா்களுக்கு வழங்காமல் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், ஏஐஜிஇடிஓஏ சங்க மாவட்ட துணைத் தலைவா் ராஜேஷ்குமாா், எஸ்என்இஏ மாவட்டச் செயலா் ஆா்.பாலமுரளி, ஏஐபிஎஸ்என்எல் சங்க மாவட்டச் செயலா் ஆா்.ராமசுந்தரம், எஸ்இஏ மாவட்டச் செயலா் விஜயகுமாா், பிஎஸ்என்எல்யூ மாவட்டச் செயலா் கிருஷ்ணன், என்எப்டிஇ மாவட்டச் செயலா் கே.மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT