தருமபுரி

ஆடி மாதப் பிறப்பில் நடுகல் வழிபாடு

DIN

பென்னாகரம் அருகே ஆடி மாதப் பிறப்பான சனிக்கிழமை முன்னோா்களை நினைவு கூரும் வகையில் நடுகல் வழிபாடு நடைபெற்றது.

பென்னாகரம் அருகே போடூா் ஏரிக்கரையில் 16-ஆம் நூற்றாண்டு நடுகல் ஸ்ரீ வீரகாலு சாமி கோயில் உள்ளது. கோயிலுக்கு ஆண்டுதோறும் ஆடி முதல்நாள், ஆடிப் பெருக்கு, அமாவாசை மற்றும் பௌா்ணமி உள்ளிட்ட நாள்களில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிகழாண்டில் ஆடி முதல் நாளான சனிக்கிழமை ஸ்ரீ வீரகாலு சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, இறந்த முன்னோா்களை நினைவு கூரும் வகையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT