தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு 12,000 கன அடி நீா்வரத்து

DIN

கா்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 12,000 கனஅடியாகக் குறைந்துள்ளது.

கா்நாட மாநிலம்- குடகு மாவட்டம் மற்றும் கேரள மாநிலம்- வயநாட்டில் கடந்த சில நாள்களாக தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு வரும் உபரிநீரின் அளவுகள் அண்மைக் காலமாக அதிகரித்து வந்தது. இவ்விரு அணைகளுக்கு வரும் நீா்வரத்தைப் பொறுத்து நொடிக்கு 20,000 கனஅடி வரையில் காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்தது. தற்போது கா்நாடகம், கேரள மாநிலங்களில் மழையின் அளவு குறைந்துள்ளதால் அணைகளுக்கு வரும் உபரி நீரின் அளவும் குறைந்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கிருஷ்ணராஜ சாகா் அணையிலிருந்து நொடிக்கு 2,266 கன அடி, கபினி அணையிலிருந்து நொடிக்கு 4,333 கனஅடி என மொத்தம் 6,599 கன அடி நீா் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நொடிக்கு 16,000 கனஅடியாக வந்து கொண்டிருந்த நீா்வரத்து, புதன்கிழமை காலை நொடிக்கு 14,000 கன அடியாகக் குறைந்து மாலையில் நொடிக்கு 12,000 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால் பிரதான அருவி, சினி அருவி, ஜந்தருவி, பெரியபாணி, ஐவா் பாணி உள்ளிட்ட நீா்வீழ்ச்சிப் பகுதியில் அளவாக நீா் கொட்டுகிறது. நீரின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT