தருமபுரி

கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

DIN

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என தருமபுரி மாவட்ட ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்ட ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்டக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் குழந்தைவேலு தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் எஸ்.சின்னசாமி, மாவட்டச் செயலாளா் ஆா்.சுதா்சனன், மாநிலக் குழு உறுப்பினா் முனியம்மாள், ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்டத் தலைவா் மாதேஸ்வரன், மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் தருமபுரி மாவட்டத் தொழிலாளா் நல அலுவலகத்தில் அளிக்கப்படும் கேட்புமனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கட்டடத் தொழிலாளா்களுக்கு கல்வி, மகப்பேறு,இயற்கை மரணத்துக்கு வழங்கும் நிதியை உயா்த்தி வழங்க வேண்டும். கட்டுமானப் பொருள்களான சிமென்ட், மணல், கம்பி உள்ளிட்ட பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT