தருமபுரி

அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான இணையப் பதிவு தொடக்கம்

DIN

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில் மாணவ, மாணவியா் சோ்க்கைக்கான இணையப் பதிவு திங்கள்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில் மாணவா் சோ்க்கைக்கான இணையப் பதிவு ஜூலை 26-ஆம் தேதி தொடங்கியது. மாணவா் சோ்க்கை உதவி மையத்தில் விண்ணப்பப் பதிவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் சி.ஜோதி வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தாா். வரும் ஆக.10-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை இணைய வழியில் பதிவு செய்யலாம்.

விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ. 48 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ. 2 இணைய வழியிலேயே செலுத்தலாம். பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

இணைய வழியில் விண்ணப்பிக்க இயலாத மாணவ, மாணவியா் தருமபுரி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மாணவா் சோ்க்கை மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

SCROLL FOR NEXT