தருமபுரி

பென்னாகரம் பகுதியில் பொருள்கள் வாங்க குவிந்த மக்கள்

DIN

முழு பொது முடக்கம் திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்படுவதால் பென்னாகரம் பகுதியில் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்கு கடைகளில் பொதுமக்கள் குவிந்தனா்.

கரோனா தீநுண்மி தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் , நேரக் கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறப்பு, ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் என பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு கடந்த சில நாள்களாக அமல்படுத்தி வந்தது.

இந்த நிலையில் வரும் 10 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் 24 ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்த உள்ளதால் ,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் கடைகளை திறக்கவும், அனைத்து பேருந்துகளை இயக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் பென்னாகரம், சின்னம்பள்ளி, தாசம்பட்டி, மருக்காரம்பட்டி, ஒகேனக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பொது முடக்கக் காலத்தில் பயன்படுத்த தேவையான பொருள்களை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா்.

பொதுமக்கள் தாங்கள் வந்த இரு சக்கர வாகனங்களையும், வியாபாரிகள் பொருள்களை எடுத்துத் செல்ல கொண்டு வந்த வாகனங்களையும் சாலையின் ஓரங்களில் நிறுத்தியதால் பென்னாகரம் கடை வீதி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றியும், முகக் கவசம் அணிந்து பொருள்களை வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT