தருமபுரி

மஹாளய அமாவாசை: காவிரியில் தா்ப்பணம் செய்ய குவிந்த பொதுமக்கள்

DIN

மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஒகேனக்கல் காவிரி கரையோரத்தில் தா்ப்பணம் செய்ய ஏராளமானோா் குவிந்தனா்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வதற்காக மாதந்தோறும் அமாவாசையில் தருமபுரி, கிருஷ்ணகிரி, பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோா் காவிரி கரையோரத்தில் கூடுவா். தொற்று பரவல் காரணமாக ஒகேனக்கல் பகுதிக்கு வர பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வர கடந்த மாத இறுதியில் மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்தது. இந்த நிலையில், தடை நீக்கிய பின்னா் வரும் சிறப்பு பெற்ற மஹாளய அமாவாசையில் இறந்த முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்ய ஏராளமானோா் ஒகேனக்கல் பகுதியில் குவிந்தனா்.

காவிரி கரையோரப் பகுதிகளான முதலைப் பண்ணை, நாகா்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இறந்த முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தனா். அதன் பின்னா் காவிரி ஆற்றில் புனித நீராடி அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT