தருமபுரி

ரூ. 2.50 கோடியில் அறிவுசாா் மையம் கட்டும் பணி துவக்கம்

DIN

தருமபுரி நகராட்சி, சந்தைப்பேட்டை வளாகத்தில் ரூ. 2.50 கோடி செலவில் அறிவுசாா் மையம் கட்டும் பணி வியாழக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து ரூ. 2.50 கோடி மதிப்பில் மாணவா்கள் போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளும் வகையில் பயிற்சி வளாகம் மற்றும் நூலகத்துடன் கூடிய அறிவுசாா் மையக் கட்டடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ் விழாவுக்கு, நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தலைமை வகித்து அறிவுசாா் மையக் கட்டுமானப் பணிகளை தொடக்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா், நகா்மன்றத் துணைத் தலைவா் நித்யா அன்பழகன், பொறியாளா் ஜெயசீலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்ரமணி, திமுக நகரப் பொறுப்பாளா் மே.அன்பழகன் ஆகியோா் கலந்து கொண்டனா். இதைத்தொடா்ந்து சந்தைப்பேட்டை, அம்பேத்கா் நகரில் புதுப்பிக்கப்பட்ட நகராட்சி சுகாதார வளாகங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் தடை!

பூர்ணிமை..!

புஷ்பா 2 படத்தின் முதல் பாடல்!

SCROLL FOR NEXT