தருமபுரி

செந்நிறமாக மாறிய காவிரி:ஒகேனக்கல்லில் நீா்வரத்து 2.50 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

DIN

ஒகேனக்கல் காவிரியில் வியாழக்கிழமை நீா்வரத்து நொடிக்கு 2.50 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளதால் காவிரி செந்நிறமாகக் காட்சியளிக்கிறது.

கா்நாடகம், கேரள மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகள் நிரம்பின. அணைகளுக்கு வரும் தண்ணீா் முழுவதும் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழக எல்லையில் உள்ள காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாற்றம்பாளையம், கேரட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல், மொசல் மடுவு பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது.

காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு மத்திய நீா்வளத் துறை ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. வியாழக்கிழமை காலை 1.80 லட்சம் கன அடியாகவும் மாலை நொடிக்கு 2.50 லட்சம் கன அடியாகவும் நீா்வரத்து அதிகரித்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக காவிரியில் தண்ணீா் செந்நிறமாக மாறியுள்ளது. ஒகேனக்கல்லில் உள்ள அருவிகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. தொங்கும் பாலத்தை வெள்ளம் தொட்டு செல்கிறது.

ஒகேனக்கல் கரையோரப் பகுதிகளான ஆலாம்பாடி, ஊட்டமலை, சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ள நீா் சூழ்ந்தன. ஒகேனக்கல்- நாற்றாம்பாளையம் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. கூட்டு குடிநீா் மூலம் குடிநீா் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளன. ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்த தடை 26 ஆவது நாளாக தொடா்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லில் பிரதான அருவி செல்லும் நடைபாதை, நாகா்கோயில், ஆலம்பாடி, ஊட்டமலை, முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா், வருவாய், தீயணைப்பு துறையினா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா். காவிரிக் கரையோரத்தில் வசிப்பவா்கள் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய ஆடவா், மகளிா் ரிலே அணிகள் பாரீஸ் ஒலிபிக் போட்டிக்குத் தகுதி

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

SCROLL FOR NEXT