தருமபுரி

ஆக. 30-இல் இந்திய கம்யூனிஸ்ட் மறியல் போராட்டம்

DIN

மத்திய அரசுக்கு எதிராக ஆக. 30-ஆம் தேதி தருமபுரியில் மறியல் போராட்டம் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகிகள், வட்டாரச் செயலாளா்கள் ஆலோசனைக் கூட்டம் மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.தேவராஜன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ந.நஞ்சப்பன், மாவட்டச் செயலாளா் எஸ்.கலைச்செல்வம் உள்ளிட்டோா் பேசினா்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் மீதான விலையேற்றம், உணவுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவது உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆக. 30-ஆம் தேதி தருமபுரியில் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினா்கள் கா.சி.தமிழ்க்குமரன், எஸ்.சின்னசாமி, எம்.மாதேஸ்வரன், கமலாமூா்த்தி, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி, மாவட்டக் குழு உறுப்பினா் சிவலிங்கம், நல்லம்பள்ளி வட்டாரச் செயலாளா் ப.பிரசாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் பரவலாக மழை

வால்பாறை அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடப் பணிகள்: சாா் ஆட்சியா் ஆய்வு

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: மும்பைக்கு அழைத்துச் செல்லப்படும் பிபவ் குமாா்

தலைநகரில் புதிய உச்சம் தொட்டது மின் தேவை!

கனமழை: வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் பல இடங்களில் மண் சரிவு

SCROLL FOR NEXT