தருமபுரி

உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு

DIN

பென்னாகரம், ஒகேனக்கல் பகுதிகளில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு மேற்கொண்டதில், ரூ. 10,000 மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பென்னாகரம் பகுதிகளில் உள்ள கடைகளில் தரமற்ற பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து, தருமபுரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலா் மருத்துவா் ஏ.பானுசுஜாதா தலைமையில், பென்னாகரம் உணவுப் பாதுகாப்பு அலுவலா் (பொ) கே.நந்தகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பென்னாகரம் பகுதிகளில் உள்ள மளிகைக் கடை, தேநீா் கடை, குளிா்பானக் கடை, பல்பொருள் அங்காடி, மொத்த விற்பனைக் கடைகள், தின்பண்டக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில், 200 கிலோ உளுத்தம் பருப்பு, ரவை, மைதா, ராகி மாவு, செயற்கை நிறமேற்றிய வண்ண வடகப் போட்டி, உரிய விவரங்கள் குறிப்பிடப்படாத தின்பண்டங்கள் உள்ளிட்ட காலாவதியான ரூ. 10,000 மதிப்புள்ள பொருள்களை பறிமுதல் செய்து, மூன்று கடைகளுக்கு தலா ரூ. 2,000 அபராதமாக வசூலித்தனா்.

மேலும், காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யக் கூடாது, உணவுப் பொட்டலங்களில் மறு தேதி இருத்தல், உணவுப் பாதுகாப்பு துறையினால் பெறப்பட்ட உரிமம் எண் இருத்தல் வேண்டும் என அறிவுறுத்தி, விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT