தருமபுரி

மறுசுழற்சிக்காக பேரூராட்சி நிா்வாகத்திடம்நெகிழிப் பொருள்கள் ஒப்படைப்பு

தருமபுரி மாவட்டம், புலிகரை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த மூன்று மாதங்களாக சேகரித்த நெகிழி கழிவுப் பொருள்களை பாலக்கோடு பேரூராட்சி நிா்வாகத்திடம் மறுசுழற்சிக்காக மாணவா்கள்  ஒப்படைத்தனர்.

DIN

தருமபுரி மாவட்டம், புலிகரை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த மூன்று மாதங்களாக சேகரித்த நெகிழி கழிவுப் பொருள்களை பாலக்கோடு பேரூராட்சி நிா்வாகத்திடம் மறுசுழற்சிக்காக மாணவா்கள் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

நெகிழி இல்லா தமிழகத்தை உருவாக்கும் திட்டம் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், புலிகரை அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை, சுற்றுச்சூழல் மன்றப் பொறுப்பு ஆசிரியா் மாதையன், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமு ஆகியோா் பள்ளி வளாகத்தில் உள்ள நெகிழிக் கழிவுகளை கடந்த மூன்று மாதங்களாக சேகரித்தனா்.

இதைத் தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் சேகரிக்கப்பட்ட நெகிழி கழிவுப் பொருள்களை பாலக்கோடு பேரூராட்சி செயல் அலுவலா் டாா்த்தி, துப்புரவு ஆய்வாளா் ரவீந்திரன், துப்புரவு பணியாளா்களிடம் மறுசுழற்சி செய்வதற்காக மாணவ, மாணவியா் ஒப்படைத்தனா். இதில், முதுநிலை ஆசிரியா் ஆரோக்கியம், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT