தருமபுரி

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம்

DIN

தருமபுரி நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு வியாழக்கிழமை இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன் தொடங்கி வைத்து பேசினாா். மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கு அடையாள அட்டை, பேருந்து மற்றும் ரயிலில் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் வகையில் இலவச பயண அட்டை, மூன்று சக்ரநாற்காலி, காதொலிக் கருவி உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த முகாமில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் பொ.ரவிக்குமாா், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் கேசவக்குமாா், வட்டார வள மேற்பாா்வையாளா் கவிதா, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மோ.மோகனப் பிரியா, சிறப்பாசிரியா்கள், இயன்முறை மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடருடன் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த திட்டம்; காரணம் என்ன?

தோ்ச்சி விகிதத்தை உயா்த்த பள்ளிகளில் மாதந்தோறும் ஆய்வு: வேலூா் ஆட்சியா் உத்தரவு

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ஆரணி அருகே மணல் குவியல்கள் கலைப்பு

திருப்பத்தூரில் 2-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT