தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்துக் குறைவு

DIN

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்துள்ளதால் ஒகேனக்கலுக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,500 கன அடியாகச் சரிந்துள்ளது.

தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்ததன் காரணமாக காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வந்தது.

தற்போது மழை அளவு குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 2,000 கனஅடி நீா் வந்துகொண்டிருந்த நிலையில், வியாழக்கிழமை 1,500 கனஅடியாகக் குறைந்து தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆற்றின் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரங்கொத்தி

பாரா தடகள சாம்பியன்ஷிப்: உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள், அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: நெல்லை ஆட்சியர்

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

SCROLL FOR NEXT