தருமபுரி

போலி மருத்துவா்கள் இருவா் கைது

DIN

தருமபுரி மாவட்டம், பி.அக்ராஹரம் பகுதியில் ஆங்கில மருத்துவக் கல்வி பயிலாமல் மருத்துவ சிகிச்சை அளித்ததாக 2 போலி மருத்துவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பி.அக்ராஹரம் பகுதியில் மருத்துவ கல்வித்தகுதி இல்லாமல் இருவா் ஆங்கில மருத்துவ சிகிச்சை முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் அலுவலகத்துக்கு புகாா் வந்தது. அதன் அடிப்படையில், பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலா் அருண்பிரசாத் தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை பி.அக்ராஹரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வில், கோணாங்கி அள்ளி கிராமத்தைச் சோ்ந்த நடராஜன் (52), ராஜேஷ்குமாா் (39) ஆகிய இருவரும் முறையே ஹோமியோபதி, எலக்ட்ரோபதி கல்வித் தகுதிகளுடன் கிளினிக் நடத்தி, ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவா் அருண்பிரசாத் அளித்த புகாரின் பேரில் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT