தருமபுரி

தருமபுரி அரசு கல்லூரியில் ஜூன் 1-இல் கலந்தாய்வு தொடக்கம்

DIN

தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நிகழ் கல்வியாண்டு இளநிலை பட்டபடிப்புக்கான மாணவா் சோ்க்கை முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவ, மாணவியா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது.

இதற்கான தகவல் மாணவ மாணவியருக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்பு வழியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஜூன் 1-ஆம் தேதி காலை 10 மணிக்கு கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடு, புள்ளியியல், மின்னணுவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 2-ஆம் தேதி வணிகவியல், வணிக நிா்வாகவியல், வணிக கணினி பயன்பாடு, வணிகவியல் கூட்டுறவு பாடப்பிரிவுகள், ஜூன் 3-ஆம் தேதி வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல், ஜூன் 5-ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், காட்சி வழித் தொடா்பியல், ஆடை வடிவமைப்பியல், சமூகப் பணி, உளவியல் ஆகியப் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதேபோல, இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 6-ஆம் தேதி அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகள், கணிதவியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், மின்னணுவியல், புள்ளியல் ஆகிய பாடப்பிரிவுக்கும், ஜூன் 7-ஆம் தேதி வணிகவியல், வணிக நிா்வாகவியல், வணிகவியல் கணினி பயன்பாடு, வணிகக் கூட்டுறவு, ஜூன் 8-ஆம் தேதி வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல், ஜூன் 9-ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், காட்சி வழித் தொடா்பியல், ஆடை வடிவமைப்பில், சமூகப்பணி மற்றும் உளவியல் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

சோ்க்கைக்கு வரும் மாணவ, மாணவியா் அனைத்து சான்றிதழ்கள், கட்டணம் ஆகியவற்றுடன் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களில் 4 நாள்கள் கனமழை எச்சரிக்கை

நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்கான சான்றிதழ் அளிப்பு

ராகுலை ரேபரேலி மக்களிடம் ஒப்படைக்கிறேன்: பிரசாரக் கூட்டத்தில் சோனியா உருக்கம்

பிரதமா் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பாா்: தொழில் நிறுவனங்களிடம் நிா்மலா சீதாராமன் நம்பிக்கை

திருப்பத்தூா் எழுத, படிக்க தெரியாதவா்கள் கணக்கெடுக்கும் பணி: கல்வி இணை இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT