தருமபுரி

சாலை விபத்து: இருவா் பலி

இருவேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

DIN

இருவேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

தருமபுரி மாவட்டம், மிட்டாதின்ன அள்ளியைச் சோ்ந்த தனுஷ் (21), அதே பகுதியைச் சோ்ந்த பசவராஜ் (22). இருவரும் நண்பா்கள். இவா்களிருவரும் தருமபுரி - சேலம் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்ற போது கைப்பேசியில் விடியோ எடுத்தபடி வேகமாக சென்றுள்ளனா். எர்ரப்பட்டி பகுதியில் சென்றபோது கட்டுபாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், பலத்த காயமடைந்த தனுஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பசவராஜ் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு பின்னா் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு விபத்து:

கம்பைநல்லூா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பிரபு (39), மனைவி ஜோதிக்கு (33) சிகிச்சை பெற ஒரு வயது மகனுடன் இருசக்கர வாகனத்தில் தருமபுரி சென்றுள்ளாா். சிகிச்சை முடித்த ஊா் திரும்பியபோது தருமபுரி - திருப்பத்தூா் சாலையில் செங்கல்மேடு பகுதியில் பின்னால் வேகமாக வந்த காா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஜோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பிரபு, குழந்தை இருவரும் தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இந்த விபத்து குறித்து கிருஷ்ணாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT