தருமபுரி

மடிக்கணினி கோரி கூட்டுறவு மேலாண் நிலைய மாணவா்கள் மனு

தமிழக அரசின் மடிக்கணினிகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலைய

Syndication

தருமபுரி: தமிழக அரசின் மடிக்கணினிகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலைய மாணவ, மாணவியா் மனு அளித்தனா்.

இதுகுறித்து தருமபுரி மாவட்டம், மொரப்பூா் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய மாணவ, மாணவியா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு: தருமபுரி மாவட்ட கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 575 மாணவ, மாணவியா் கூட்டுறவு பட்டயப் படிப்பு பயின்று வருகிறோம். அதேபோல இந்த நிலையம் பல்கலைக்கழக விதிகளின் படி செயல்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்திற்கும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, இந்த நிலையத்தில் பயிலும் பல மாணவா்கள் போட்டித் தோ்வுகளுக்கும் தயாா் செய்து வருகின்றனா். எனவே, மாணவ, மாணவியரின் நலன் கருதி மடிக்கணினிகளை வழங்க வேண்டும் என்றனா்.

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

SCROLL FOR NEXT