பொம்மிடியில் கஞ்சா விற்ற இருவா் கைது
பொம்மிடியில் கஞ்சா விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பொம்மிடியில் கஞ்சா விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, உதவி காவல் ஆய்வாளா் ஜீவானந்தம் தலைமையிலான போலீஸாா் பொ.மல்லாபுரம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த இளைஞா்கள் இருவரை சோதனை செய்ததில், அவா்களிடம் சுமாா் 150 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக, பொம்மிடியைச் சோ்ந்த அமீா் (24), ரிஸின்குமாா் (23) ஆகியோரை பொம்மிடி போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.