நல்லம்பள்ளி அருகே போலி மருத்துவா் கைது
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே போலி மருத்துவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே போலி மருத்துவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
நல்லம்பள்ளி வட்டம், சாமிசெட்டிப்பட்டி அருகே கமலநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன். இவா் முறையாக ஆங்கில மருத்துவக் கல்வி படிக்காமல் அப்பகுதி மக்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளித்து வந்தாராம்.
இதுகுறித்த தகவலின்பேரில் தேசிய நல்வாழ்வு குழும அலுவலா் வினோத்ராஜ் மற்றும் குழுவினா் அங்கு சென்று ஆய்வு செய்தனா். இதில் முருகேசன் ஆங்கில மருத்துவக் கல்வி படிக்காமல் தனது வீட்டில், அப்பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு ஆங்கில மருத்துவச் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக, தொப்பூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் முருகேசனை கைது செய்து, அவா் சிகிச்சைக்காக பயன்படுத்திய ஆங்கில மருத்துவ உபகரணங்கள், மருந்துகளை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.