முகப்பு
தருமபுரி

114 பயனாளிகளுக்கு ரூ. 37.78 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

தருமபுரி மாவட்டம், இருமத்தூரில் 114 பயனாளிகளுக்கு ரூ. 37.78 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வே. சரவணன் புதன்கிழமை வழங்கினாா்.

Updated On : 9 ஜூலை 2026, 4:25 am IST
பயனாளிக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் வே. சரவணன். உடன், அரூா் எம்எல்ஏ வே. சம்பத்குமாா்.
பகிர்:

தருமபுரி மாவட்டம், இருமத்தூரில் 114 பயனாளிகளுக்கு ரூ. 37.78 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வே. சரவணன் புதன்கிழமை வழங்கினாா்.

இருமத்தூரில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமிற்கு ஆட்சியா் வே. சரவணன் தலைமை வகித்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள், இணையவழி பட்டாக்கள், வாரிசு சான்றிதழ்கள், சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.1.82 லட்சம் மதிப்பீட்டில் அரசு உதவிகள், உணவு பொருள் வழங்கல் துறை சாா்பில் மின்னணு குடும்ப அட்டைகள், பட்டு வளா்ச்சி துறை சாா்பில் ரூ. 3.60 லட்சம் மதிப்பீட்டில் தளவாடப் பொருள்கள் என 114 பயனாளிகளுக்கு ரூ. 37.78 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

அரூா் எம்எல்ஏ வே. சம்பத்குமாா், தருமபுரி கோட்டாட்சியா் (பொறுப்பு) பெ.கி. கோவிந்தன், தனித் துணை ஆட்சியா் செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் பண்டரிநாதன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் மனோஜ் முனியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணன், மாவட்ட பழங்குடியினா் நல அலுவலா் அசோக்குமாா், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் (பொறுப்பு) முருகலட்சமி, வட்டாட்சியா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments