கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை காவல் நிலையத்தை மினி டெம்போ ஓட்டுநர்கள் முற்றுகை

தினமணி

ஊத்தங்கரையில் ஓட்டுநரைத் தாக்கிய நபரை கைது செய்ய கோரி காவல் நிலையத்தை மினி டெம்போ ஓட்டுநர்கள் சங்கத்தினர் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
 ஊத்தங்கரை-சேலம் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகன் செல்வம் (29). இவர், ஊத்தங்கரையில் மினி டெம்போ ஓட்டுநராக உள்ளார்.
 ஊத்தங்கரை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் முருகன் என்ற சின்னமணி (28) என்பவரும், அவரது உறவினர் பார்த்திபன் என்பவரது மகன் சுறா என்ற சுடர்வளவன் என்பவரும் செவ்வாய்க்கிழமை காலை செல்வத்திடம் சென்று சவாரிக்கு அழைத்துள்ளனர்.
 அதற்கு செல்வம் வேறு சவாரி இருப்பதால் வரமுடியாது எனக் கூறியுள்ளார். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் செல்வம் தாக்கப்பட்டார். படுகாயமடைந்த செல்வம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர், கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யாமல் தாமதப்படுத்துவதாகவும், சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய கோரியும் ஊத்தங்கரை மினிடெம்போ ஓட்டுநர்கள் சங்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை புதன்கிவமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதையடுத்து அவர்களை சமரசப்படுத்திய போலீஸôர், ஓட்டுநரைத் தாக்கிய இருவர் மீது வழக்குப் பதிந்து அதில் சின்னமணியை (28) கைது செய்தனர். மற்றொருவரைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT