கிருஷ்ணகிரி

தூய்மை இந்தியா திட்ட கட்டுரைப் போட்டி: அரசு மகளிர் கல்லூரி மாணவி முதலிடம்

DIN

பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்ட கட்டுரைப் போட்டியில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரி மாணவி தீபா முதலிடம் பெற்றார்.
கிருஷ்ணகிரி மாவட்ட நேரு இளையோர் மையம் சார்பில் பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்ட கட்டுரைப் போட்டி கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
போட்டியின் நடுவர்களாக அரசு மகளிர் கல்லூரியின் முதல்வர் நாகராஜன், தமிழ்த் துறை உதவி பேராசிரியர் ரேவதி, பாரதி கல்வியல் கல்லூரியின் முதல்வர் நடராஜன், பாரத் சஞ்ஜார் நிகாம் நிறுவன உள்கோட்ட பொறியாளர் ரமேஷ் ஆகியோர் செயல்பட்டனர்.
இந்தப் போட்டியில் அரசு மகளிர் கலைக் கல்லூரியின் மாணவி தீபா முதலிடம் பெற்றார். இரண்டாம் பரிசை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மாணவி நந்தினியும், மூன்றாம் பரிசை பாரதி கல்வியல் கல்லூரி மாணவர் பெருமாள் ஆகியோர் பெற்றனர். முதலிடம் பெற்ற மாணவி தீபா மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியரை நேரு இளையோர் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் திருநீலகண்டன் வாழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT