கிருஷ்ணகிரி

காய்கறிகள் சாகுபடி விழிப்புணர்வு முகாம்

DIN

பையூர் துல்லியப் பண்ணையில் காய்கறிகள் சாகுபடியில் உரங்களின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம்,  காவேரிப்பட்டணம் அடுத்த பையூரில் உள்ள கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், நீர்நுட்ப மையம், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையம் இணைந்து, கிருஷ்ணகிரி முதல் பாம்பாறு வரையிலான உபவடிநிலப் பகுதி விவசாயிகளுக்கு, நீர் மேலாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் துல்லியப் பண்ணையில் காய்கறி சாகுபடி குறித்த விழிப்புணர்வு முகாம் பையூரில் நடைபெற்றது. 
குறிப்பிட்டளவு நீர், கரையும் உரங்களை பயன்படுத்துவது,  குறித்த நேரத்தில் உரங்களை பயன்படுத்துவது மற்றும்  அதிக மகசூல் பெறுவது  குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நீர்வள, நில வளத் திட்டம் குறித்தும்,  நீர் மேலாண்மை,  துல்லிய பண்ணைக் காய்கறி சாகுபடி குறித்தும் திட்ட விஞ்ஞானி செந்தில்குமார் விளக்கம் அளித்தார். 
இந்த முகாமில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். முகாமை தொழில்நுட்ப உதவியாளர் நந்தகுமார் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT