கிருஷ்ணகிரி

உலக மகளிர் தினம்: ஊத்தங்கரையில் உழைக்கும் பெண்கள் கெளரவிப்பு

DIN

உலக மகளிர் தினத்தையொட்டி, ஊத்தங்கரையில் பல்வேறு அரசு துறைகள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பெண்கள் கெளரவிக்கப்பட்டனர்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழக்குரைஞர் த.பிரபாவதி வரவேற்றார். அதியமான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலர் ஷோபா திருமால்முருகன் தலைமை வகித்தார். மருத்துவர் சென்னம்மாள், மாவட்ட நூலக ஆய்வாளர் ஆனந்தி, படப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை தாசூன், சங்கர்கேப் உமாராணி, வழக்குரைஞர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இந் நிகழ்ச்சியில் சமுதாயத்தில் பெண்களின் பங்களிப்பு, பெண்களுக்கு கிடைக்கக்கூடிய அரசு சலுகைகள், பெண்களுக்கான மருத்துவ குறிப்புகள், சாதனை செய்த பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் போன்ற தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. 
ஊத்தங்கரை ஒன்றியத்தில் பல்வேறு சேவைகளைச் செய்த பெண்களின் புகைப்படக் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. எரிவாயுவைப் பாதுகாப்பாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்துவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
பெண் துப்புரவுப் பணியாளர்களுக்கு பரிசு வழங்கி சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளி பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பெண்கள் பள்ளி பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் ஏ.தேவராசன், ஆண்கள் பள்ளி பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் வி.சுவாமிநான், இந்தியன் வங்கி மேலாளர் கணபதி, சஙகர்கேப் உரிமையாளர் இர.உமாபதி, கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தமாள், அரசு பொது நல மருத்துவமனை தலைமைச் செவிலி மலர்விழி, பெண்கள் விடுதி பாதுகாவலர் ஆர்.பிரபாவதி, கணினி ஆசிரியை உமாமகேஸ்வரி, மற்றும் மனநல ஆலோசகர் ஜெயந்தி மற்றும் காவல்துறை,வருவாய்துறை, பஞ்சாயத்து அலுவலகம் ஆகிய துறைகளில் பணியாற்றும் பெண்கள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், ஆசிரியைகள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வழக்ககுரைஞர் த.பிரபாவதி, ரோசி, லட்சுமி, ரமா,சின்னத்தாய், உமாமகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT